சூர்யா நடிப்பில் வெளியான 24 படம் உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழகம் மட்டுமில்லாமல் அமெரிக்கா, கனடாவிலும் வசூலை குவித்து வருகிறது.இப்படம் ஒரு வாரத்தில் அமெரிக்காவில் 1,186,263 டாலர்களும், கனடாவில் 1,269,570 கனடிய டாலர்களும் வசூலித்துள்ளது.
இந்திய மதிப்பில் இந்த தொகை ரூ.8.46 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகததால் படத்தின் வசூல் அள்ளுகிறது.