Quantcast
Channel: 123Cine News
Viewing all articles
Browse latest Browse all 1703

தெறி படத்திற்கு பதிலாக வெற்றிவேல் ரிலீஸ்!

$
0
0

gadfstdasft-419x300இளையதளபதி விஜய் நடித்த ‘தெறி’ திரைப்படம் கடந்த 14ஆம் தேதி ரிலீஸ் ஆகி தமிழகம் முழுவதும் பெருவாரியான திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் ரிசல்ட் காரணமாக இரண்டு வாரங்களுக்கு வேறு எந்த படங்களும் ரிலீஸ் ஆகாது என்றே கூறப்பட்டது.

எனவே பல முன்னணி நடிகர்களின் படங்கள் ஏப்ரல் 29ஆம் ரிலீஸ் என்றே கூறப்பட்டது. அந்த வரிசையில் சசிகுமாரின் ‘வெற்றிவேல்’ திரைப்படமும் ஏப்ரல் 29ஆம் தேதி ரீலீஸ் என முதலில் கூறப்பட்ட நிலையில் பின்னர் திடீரென ஏப்ரல் 22ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதற்கு காரணம் ‘தெறி’ படத்தை ரிலீஸ் செய்யாத செங்கல்பட்டு திரையரங்க உரிமையாளர்கள் இந்த படத்தை முன்கூட்டியே ரிலீஸ் செய்தால் திரையிட தயார் என்று கூறியதுதான் என்று கூறப்படுகிறது.

கோலிவுட் திரையுலகில் இதுவரை ஒரு படத்தின் ரிலீஸ் தள்ளிப்போன வரலாற்றைத்தான் பார்த்திருக்கின்றோம். ஆனால் இந்த படம் திட்டமிட்ட தேதிக்கு முன்பே ரிலீஸ் ஆகிறது. என்பது குறிப்பிடத்தக்கது. இதை இசையமைபாளர் டி.இமான் தனது டுவிட்டரில், “#Vetrivel One of the rare activity in cinema! Release preponed! Theatrical release From April 22nd! என்று குறிப்பிட்டுள்ளார்.


Viewing all articles
Browse latest Browse all 1703

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்