அட்லி இயக்கத்தில் ‘இளையதளபதி’ விஜய், சமந்தா, எமி ஜாக்சன் நடித்திருக்கும் தெறி படத்தின் டிரைலர் வெளியான முதல் 6 நாட்களில் 5 மில்லியன் ஹிட்ஸை பெற்றதோடு மக்களின் பேராதரவால் இந்த டிரைலர் 2 லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ்களை பெற்றிருப்பதாக நாம் ஏற்கனவே பார்த்தோம்.
ஏற்கனவே வெளியான தெறி படத்தின் டீசரும் இதேபோல 2 லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ்களை பெற்றிருந்தது. தமிழ் சினிமாவில் ஒரு படத்தின் டீசர் மற்றும் டிரைலர் இரண்டும் 2 லட்சம் லைக்ஸ்களை பெறுவது இதுவே முதல்முறையாகும். இந்த சாதனையை தெறி படைத்துள்ளது.