அட்லி இயக்கத்தில் ‘இளையதளபதி’ விஜய், சமந்தா, எமி ஜாக்சன் நடிப்பில் சமீபத்தில் வெளியான தெறி திரைப்படம் வசூலில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. வெளியான ஆறு நாட்களிலேயே இப்படம் ரூ. 100
கோடி கிளப்பில் இணைந்தது நாம் அனைவரும் அறிந்ததுதான்.
இந்நிலையில் 25-வது நாள் முடிவில் தமிழகத்தில் மட்டும் இப்படத்துக்கு ரூ. 55 கோடி விநியோகஸ்தர்கள் ஷேர் வந்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் எந்திரனுக்கு அடுத்து அதிக ஷேர் தந்த படமாக தெறி உருமாறியுள்ளது. இதற்குமுன்பு அந்த இடத்தில் இருந்த வேதாளம் படத்தின் சாதனையை இப்படம் முறியடித்துள்ளது.