Quantcast
Channel: 123Cine News
Viewing all articles
Browse latest Browse all 1703

ரிலீசுக்கு முன்பே சாதனையை தொடங்கியது ‘கபாலி’

$
0
0

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் கடந்த வாரம் வெளிவந்த விஜய்யின் ‘தெறி’ திரைப்படம் உலகம் முழுவதும் பல்வேறு சாதனைகளை முறியடித்தது என்பதை பார்த்தோம். இந்நிலையில் அவருடைய தயாரிப்பில் உருவாகியுள்ள மற்றொரு படமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘கபாலி’யும் ரிலீஸுக்கு முன்னரே தனது சாதனையை தொடங்கிவிட்டது.

‘கபாலி’ திரைப்படம் இந்தோனேஷியா நாட்டில் 300க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீஸ் ஆகவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதுவரை எந்த ஒரு இந்திய திரைப்படமும் இவ்வளவு அதிகளவு தியேட்டர்களில் அந்நாட்டில் ரிலீஸ் ஆனதில்லை என்ற நிலையில் ‘கபாலி’ இந்த சாதனையை செய்யவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

‘கபாலி’ படத்தின் டப்பிங் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் மே 1ஆம் தேதி வெளிவரவுள்ளது. ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ், ஜான்விஜய் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ‘அட்டக்கத்தி’ ரஞ்சித் இயக்கியுள்ள இந்த திரைப்படம் மே இறுதியில் அல்லது ஜூன் முதல் வாரத்தில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Viewing all articles
Browse latest Browse all 1703

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்