கெளதம் கார்த்திக் தற்போது இந்திரஜித், ரங்கூன், சிப்பாய், முத்துராமலிங்கம் படங்களில் நடித்து வருபவர், அடுத்தப்படியாக இன்னொரு புதிய படத்திலும் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
தல அஜித் நிஜத்தில் பைக் ரேசர் அன்று அனைவரும் அறிந்ததே.தற்போது கெளதம் கார்த்திக் அடுத்த படத்தில் பைக் ரேஸராக நடிக்கிறார் .
சென்னையில் சட்டத்திற்கு புறம்பாக பைக் ரேஸ்கள் நடப்பது பிரபலம். இதை வைத்து சூதாட்டம் கூட ஆடுவார்கள். இதை மையப்படுத்தி புதியவர் பாலா என்பவர் ஒரு படம் இயக்குகிறார். இதில் கவுதம் கார்த்திக் பைக் ரேஸராக நடிக்கிறார். படத்திற்கு “”46″” என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். விரைவில் இந்தப்படம் ஆரம்பமாக இருக்கிறது.
இத்தாலியை சேர்ந்த பிரபல பைக் ரேஸர் வேலன்டினோ ரோஸியின் பைக் எண் “46”, அதன் அடிப்படையில் இப்படத்திற்கு “”46″” என்று தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது