இளைய தளபதி விஜய்க்கு கேரளாவிலும் அதிக ரசிகர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. நேற்று கேரளாவில் 200 திரையரங்கில் தெறி வந்ததாக தெரிவிக்கப்பட்டது.இப்படத்தின் முதல் நாள் வசூல் அங்கு ரூ 2 கோடிக்கு மேல் என கூறப்படுகின்றது.
அதிலும் ஒரு மல்டிப்ளக்ஷ் திரையரங்கில் ஒரே நாளில் ரூ 12.7 லட்சம் வசூல் செய்துள்ளது.இதற்கு முன் மலையாள படங்களே இத்தனை வசூலை அந்த திரையரங்கில் தொட்டது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.