வம்சி இயக்கத்தில் கார்த்தி, நாகர்ஜுனா, தமன்னா நடிப்பில் வெளியான படம் தோழா. பிரெஞ்சு படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான இப்படம் இரண்டு வாரங்களுக்கு முன்பு தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றுள்ளது.
முதல் மூன்று நாட்களில் மட்டும் ரூ. 30 கோடி வரை வசூல் செய்த இப்படம் மூன்றாம் வார முடிவில் சென்னையில் மட்டும் ரூ. 3.49 கோடி வசூல் செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தோழாவின் மூலம் நடிகர் கார்த்தி பாக்ஸ் ஆபீஸில் ஹாட்ரிக் ஹிட் அடித்துள்ளார்.