தென்னிந்திய நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கான நிதி திரட்ட, நடிகர் சங்கத்தின் சார்பில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நடிகர் சங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு, சமூக வலைதளங்களில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ள நிலையில், நடிகர் அஜித், இந்த முயற்சிக்கு ஆதரவு அளிக்காதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தனியார், டிவி சேனலுக்கு பேட்டி அளித்த நடிகர் கமல்ஹாசன், நடிகர் சங்க கட்டடம் கட்டும் விவகாரத்தில், அணில்கள் தான் தேவை; யார் ராமர் என்று பார்க்க வேண்டாம், என, தெரிவித்துள்ளார்.
இது, நடிகர் அஜித்துக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும், நடிகர் கமல் கூறிய அறிவுரை என்று, நடிகர் சங்க வட்டாரத்தில் பேசப்படுகிறது.