ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் S3 படத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மீண்டும் சூர்யாவுடன் இணைந்து நடிக்கும் அனுபவம் குறித்து பேசிய அவர், ” நான் சூர்யா படத்தில்தான் தமிழில் அறிமுகமானேன். தற்போது மீண்டும் அவருடன் இணைவது மகிழ்ச்சியாக உள்ளது.
ஹரி போன்ற இயக்குனருடன் பணியாற்றுவது நமது வேலையை பாதியாக குறைத்துவிடும். இப்படத்தில் நான் இதுவரை நடித்திராத ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்” என்றார். S3 படத்தின் நாயகி அனுஷ்காதான் என்றாலும் இப்படத்தில் இவருக்கு ஒரு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.